இலங்கையில் Samsung Galaxy S22 தொடர் அறிமுகம்

இலங்கையில் Samsung Galaxy S22 தொடர் அறிமுகம்-Samsung Galaxy S22 Series Launch in Sri Lanka

- சிறந்த அனுபவத்துடன் கூடிய தரமான Smartphoneகள்

இலங்கையின் மிகவும் நம்பகமான Smartphone brandஆன Samsung தனது பிரத்தியோகமான  ஊடக நிகழ்வொன்றில் இலங்கையில் அதன் மிகவும் பிரீமியம் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியான Galaxy S22 seriesகளை அறிமுகம் செய்தது.

Galaxy S22 ultra 5G ஆனது Note seriesஇன் நிகரற்ற சக்தி மற்றும் iconic S-Pen உடன் pro-grade camera மற்றும் S தொடரின் செயல்திறனுடன் இணைந்து premium smartphoneகளுக்கான புதிய தரநிலையை அமைத்திருக்கிறது. இதன் நிலையான உணர்வுபூர்வமான வடிவமைப்பு குறிப்பிடத்தக்கதுடன் dynamic camera with intelligent image processing ஒவ்வொரு தருணத்தையும் மிகச் சிறந்ததாக்குகிறது.

இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் Kevin SungSU YOU கருத்து தெரிவிக்கையில், “Galaxy S22 தொடரின் அறிமுகத்துடன் புத்தாக்கமான விதிகளை மீண்டும் எழுதுவதுடன் Smartphone என்ன செய்ய முடியும் என்பதற்கான புதிய வரம்புகளை அமைக்கிறோம். முதல்முறையாக Galaxy S22 ultra 5G ஆனது சிறந்த Galaxy Note மற்றும் S தொடர்களை ஒன்றிணைக்கிறது. Galaxy S22 ultra 5G S-Pen உடன் வருகிறது. மேம்பட்ட Nightography திறன்கள் மற்றும் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் battery ஆயுளைக் கொண்டிருப்பதால் அது  மிகவும் சக்தி வாய்ந்த ultra சாதனமாக உள்ளது. Galaxy S22 தொடர் சிறந்த உள்ளடக்கங்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மேம்பட்ட video பதிவுசெய்தல் editing மற்றும் share திறன்களைக் கொண்டுள்ளதால் அன்றாட நாட்களை சிறப்பாக்குகிறது” எனக் கூறினார்.

Galaxy S22 ultra 5Gஇல் உள்ளடக்கப்பட்ட S-Pen இதுவரை உருவாக்கியவற்றில் மிகவும் வேகமாக பதிலளிக்கக் கூடிய S-Pen ஆகும். 70% குறைவான தாமதத்துடன் உங்கள் Galaxy S22 ultra 5Gஇன் திரையில் எழுதலாம் மற்றும் வரையலாம். அத்துடன் புதிய வழிமுறைகளில் appsகளை பார்வையிடலாம். S-Pen உடன் Galaxy S22 ultra 5G ஆக்கப்பூர்வமாக இருக்கவும் புதிய வழிகளில் விடயங்களை செய்யவும் உதவுகிறது. இதனால் முன்பு ஒரு போதும் இல்லாத அளவுக்கு சிறந்த mobile அனுபவத்தைப் பெறலாம்.

தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்ட camera Lensesகள் மற்றும் நேர்த்தியான உலோக அமைப்பு அதிநவீன சிறந்த வடிவமைப்பை பிரதிபலிக்கிறது. Luxurious glass, haze finishing மற்றும் elegant touch உடன் மறுவடிவமைக்கப்பட்ட கோடுகள் மற்றும் floating Layout உடனான sharp angles இதன் சிறப்பம்சங்களாகும். 

Galaxy S22 ultra 5G எந்த வெளிச்சத்திலும் உடனடியான காட்சிகளைப் பதிவு செய்யும் வசதிகளைக் கொண்டுள்ளது. Samsungஇன் மிகச்சிறந்த pixel sensorஆன 24 UM pixel sensor இருப்பதால் மிகச்சிறந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கலாம். இதன் மேம்பட்ட Super Clear Glass Lens இரவு நேர வீடியோக்களை எதிர்ப்பு ஒளி இல்லாமல் தெளிவாக எடுக்க உதவுகிறது. Video Auto Framing மூலம் நீங்கள் விரும்பிய ஒரு நபரையோ அல்லது அதிகமானவற்றையோ குறிப்பாக பதிவு செய்ய முடியும். 100X Space Zoom மற்றும் சக்தி வாய்ந்த dual-tele lens quadruple-Lens camera உடன் வருகிறது. இதுவே Samsungஇன் மிகவும் சக்தி வாய்ந்த camera ஆகும்.

Galaxy S22 ultra 5G தொடரானது Portrait-mode மற்றும் Auto Framing போன்ற புதிய AI ஆதரவு அம்சங்களுடன் வருவதால் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சிறப்பாக காட்ட முடியும். இத்தொடர் DSLR போன்ற அனுபவத்தை வழங்க Expert-RAW app வசதிகளைக் கொண்டுள்ளது. 12 bit HDR வரை RAW வடிவத்தில் புகைப்படங்களை சேமிக்கும் திறன் இருப்பதால் படங்களில் திருத்தங்களை செய்யும் போது அதிக கட்டுப்பாட்டுடன் செய்யலாம். DSLR camera போலவே ISO settings மற்றும் shutter வேகம் மூலம் புகைப்படங்களை ஒளிரச் செய்யலாம் அல்லது வெளிச்சத்தை மங்கச் செய்யலாம். உங்கள் புகைப்படம் நீங்கள் விரும்பிய விதத்தில் இருக்க வெளிச்ச சமநிலையை (white balance) செய்ய முடியும்.

Galaxy S22  தொடர் இந்தியாவில் 4 nm SnapdragonR 8 Gen I mobile platform உடன் வருகிறது. இது Samsungஇன் மிகவும் மேம்பட்ட AI மற்றும் ML செயலாக்கத்தை  வழங்குகிறது. இது Wi-Fi 6Eஐ கொண்டுள்ளதால் Wi-Fi 6ஐ விட இரண்டு மடங்கு வேகமானது. அதனால் விளையாடும் போதும் வேலை செய்யும் போதும் அல்லது streaming செய்யவும் என எல்லாவற்றிற்கும் சிறந்தது. அதிக சக்தி வாய்ந்த batteryஐ Galaxy S22 Ultra கொண்டுள்ளதால் ஒரு முறை charge செய்தால் ஒரு நாள் முழுதும் அதிகமான பயன்பாட்டைக் கொடுக்கும். மற்றும் Galaxy S22 ultra 5G 45W supper fast chargingஐ ஆதரிப்பதால் 10 நிமிடம் charge செய்த பின் 50 நிமிடங்களுக்கு மேல் வீடியோ பதிவு செய்யலாம்.

Galaxy S22 ultra 5G 6.8 inch Dynamic AMOLED 2X display உடன் வருகிறது. இது 1750nits உச்ச பிரகாசத்தை உருவாக்கி அனைத்தையும் அதிர்ச்சியூட்டம் விபரங்களுடன் கொண்டு வருகிறது. Galaxy S22 5G Dynamic AMOLED 2X Display உடன் வருவதால் gamingக்கும் சிறந்ததாக இருக்கிறது. இதன் premium 6.1inch display மற்றும் Galaxy S22+ 5G sports 6.6 inch display உடன் வருகிறது. Galaxy S22 5G 1300nits உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. அதேநேரம்  S22+ 5G மற்றும் Galaxy S22 ultra 5G ஆகியவை 1750nits உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது.

கிடைக்குமிடம், விலை மற்றும் சலுகைகள்
Galaxy S22 ultra 5G (12/256GB) Phantom Black,Bugundy மற்றும் Green போன்ற நிறங்களைக் கொண்ட கையடக்க தொலைபேசிகளை 414,999 ரூபாவிற்கும் Galaxy S22 5G (8/256GB) Phantom Black, Pink Gold, Phantom White மற்றும் Green போன்ற நிறங்களில் 299,999 ரூபாவிற்கும் சந்தையில் பெற்றுக் கொள்ள முடியும். Galaxy S22 ultra 5G அல்லது Galaxy S22 5Gஐ வாங்குவோருக்கு OneDriveஇல் 6 மாதங்களுக்கு 100 GB சலுகையையும் 3 மாதங்களுக்கு Spotifi premium சந்தாவையும் Adobe Photoshop Lightroom மற்றும் Adobe Creative Cloud Expressஇல் 2 மாத premium சலுகையும் பெறுவீர்கள்.

S22 தொடரை அங்கிகரிக்கப்பட்ட John Keels office Automation மற்றும் அங்கிகரிக்கப்பட்ட Softlogic Mobile விநியோகஸ்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம். இது அங்கிகரிக்கப்பட்ட பங்காளர்களான Softlogic Retail, Singer, Singhagiri. Damro, Network Partner, Dialog, Mobitel மற்றும் Samsung E-Store (samsungsrilanka.lk) MySoftlogic.lk, Daraz.lk, Keellssuper.com மற்றும் Kapruka.com போன்ற இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

எங்கும் எப்போதும் நீங்கள் Samsung Galaxy Smartphone வாங்கும்போது மனஅமைதியை அனுபவியுங்கள்.Samsung members app உங்கள் சாதனத்தின் செயல்திறனை எளிதாக்குகிறது.உங்கள் சிக்கல்களை தீர்க்க helpline உதவுகிறது.

இலங்கையின் Samsung most love Electronic Brandஆக தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இலங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z millennial பிரிவுகளில் உள்ளது.

Samsung S22 உலகளாவிய அறிமுக நிகழ்வு


Add new comment

Or log in with...