பஸ் கட்டண அதிகரிப்பு எதிரொலி; ரயிலில் பயணிப்போர் தொகை 40% அதிகரிப்பு

- பெட்டிகளை அதிகரிக்க திணைக்களம் முடிவு

ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பஸ் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். அதற்கிணங்க, பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ற வசதியான சேவையை வழங்குவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்குமாறு பொறியியலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...