இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்; செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு

இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்; செந்தில் தொண்டமான் நன்றி தெரிவிப்பு-USD 1 Billion Loan From India-MoU-Senthil Thondaman Thank PM Narendra Modi

- இலங்கையின் பொருளாதார சுமைகள் ஓரளவு குறையுமென நம்பிக்கை

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளமையின் மூலம் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சுமைகள் ஓரளவு குறையுமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதன் பிரகாரம் அதற்கான உடன்படிக்கை இன்று (17) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நட்புறவின் காரணமாக இக்கட்டான சூழ்நிலைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கி வருகிறது. எரிபொருள் கொள்வனவு, ஏனைய அத்தியாவசிய பொருளாதார தேவைகளுக்கு இந்த நிதியை அரசாங்கம் பயன்படுத்தும்.

கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தத் தருணத்தில் இலங்கைக்கு கைகொடுத்தமைக்காக இந்திய அரசிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...