- விண்ணப்பித்த 340,626 பேரில் 335,128 பேர் தோற்றம்
- விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில்
- மார்ச் 31 வரை மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்
தற்போது வெளியாகியுள்ள 2021, தரம் 5புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த பரீட்சை இவ்வருடம் ஜனவரி 22ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று (13) அதன் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன.
2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த 340,626 பேரில் 335,128 பேர் தோற்றியிருந்ததாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
மார்ச் 31ஆம் திகதி வரைமீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும் தமிழ்மொழி மூலமான பரீட்சாத்திகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வருமாறு:
வெட்டுப்புள்ளிகள்
மாவட்டம் | சிங்கள மொழி |
தமிழ் மொழி
|
---|---|---|
1. கொழும்பு | 152 | 149 |
2. கம்பஹா | 152 | 149 |
3. களுத்துறை | 152 | 149 |
4. கண்டி | 152 | 149 |
5. மாத்தளை | 152 | 149 |
6. நுவரெலியா | 145 | 146 |
7. காலி | 152 | 149 |
8. மாத்தறை | 152 | 149 |
9. அம்பாந்தோட்டை | 148 | 147 |
10. யாழ்ப்பாணம் | - | 148 |
11. கிளிநொச்சி | - | 148 |
12. மன்னார் | - | 148 |
13. வவுனியா | 142 | 147 |
14. முல்லைத்தீவு | 140 | 147 |
15. மட்டக்களப்பு | - | 147 |
16. அம்பாறை | 145 | 147 |
17. திருகோணமலை | 145 | 147 |
18. குருணாகல் | 152 | 149 |
19. புத்தளம் | 146 | 146 |
20. அநுராதபுரம் | 146 | 147 |
21. பொலன்னறுவை | 146 | 147 |
22. பதுளை | 146 | 147 |
23. மொணராகலை | 146 | 146 |
24. இரத்தினபுரி | 148 | 145 |
25. கேகாலை | 152 | 149 |
Add new comment