மூதூர் கொட்டியாரக் கடலில் நீராட வேண்டாமென அறிவிப்பு

மூதூர் கொட்டியாரக் கடலில் நீராட வேண்டாமென அறிவிப்பு-Mutur-Bathing in Sea Banned

சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுவரும் வெளியூர் பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் என பலர் மூதூர், கொட்டியாரக்குடாக் கடற்கரையில் நீராடுவதற்கு வருவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு மூதூர் ஹபீப்நகர் மீனவர் சங்கம் மக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

மேலும் அதிகளவிலான இளைஞர்கள் மூதூர் வட்டத்து முனை, பழைய துறைமுக முகத்துவாரம் மற்றும் கொட்டியாரக்குடாக் கடற்கரை பரப்புகளில் சென்று நீராடுவதற்கு வருவதாகவும் அக்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இவ்விடங்களில் கல்வேலிகள் போடப்பட்டும் மேலும் சதுப்பு நிலங்களாகவும் காணப்படுவதாலும் கடல் கொந்தளிப்பினாலும் அவ்விடங்களில் அடிக்கடி நீரில் மூழ்கி மரணிக்கும் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே இதனை தவிர்த்துக் கொள்ளும் முகமாக இக்கடற்கரையோர பிரதேசங்களுக்கு நீராடவரவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

(மூதூர் தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...