இலங்கை கலைஞர்களும் இந்திய திரைப்பட துறைக்குள்

- உள்வாங்கப்பட வேண்டுமென்கிறார் கலா மாஸ்டர்

இலங்கை கலைஞர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. அவர்களையும் இந்திய திரைப்படத் துறைக்குள் உள்வாங்க வேண்டுமென இந்திய திரைப்பட நடன இயக்குநரும், மான் ஆட மயில் ஆட நிகழ்ச்சி தொகுப்பாளருமான கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு வருகை தந்த அவர் வவுனியா, குருமன்காடு பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நீண்ட காலத்துக்குப் பின்னர் நான் இலங்கை வந்துள்ளேன். நான், பல தடவை படப்பிடிப்புக்காக கொழும்பு வந்திருக்கின்றேன் படப்பிடிப்புக்கு சென்று அதனை முடித்து விட்டு மீண்டும் இந்தியா சென்று விடுவோம்.

முதல் தடவையாக நான் வவுனியா வந்துள்ளேன், என்னுடைய அதிக ரசிகர்கள் இலங்கையை சேர்ந்த தமிழர்கள்தான்.

நான் கனடா, லண்டன் என பல இடங்களில் நடன வகுப்புக்கள் நடத்துகிறேன். அங்கும் ஈழத் தமிழர்களே அதிகம் வருகின்றனர்.

இலங்கை தமிழர்களுக்காகவும் எனது வகுப்புக்கள் இருக்கும். இலங்கை தமிழர்களுக்களிடம் நல்ல திறமையுள்ளது.

லொஸ்லியா போன்றோர் இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் பிரபல்யமாக உள்ளார்.

இலங்கை கலைஞர்களையும் இந்திய திரைப்பட துறைக்குள் உள்வாங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன்.

யுத்தம் காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டமை பற்றி எனக்கு நிறைய கதைகள் தெரியும். அவற்றை கேட்டு நான் வேதனையடைந்தி ருக்கின்றேன்.

எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன்.

கொழும்பு போகின்றேன், வவுனியா போகின்றேன் என்று சொன்ன போது எல்லோரும் அங்கு போகிறாயா? பயமில்லையா என்றார்கள்.

ஆனால் எந்த பயமும் கிடையாது, நானும், கணவனும் மட்டுமே தனியாக வந்துள்ளோம்.

இது இராமர், முருகப்பெருமான், இராவணன் வாழ்ந்த இடம். இங்கு பயமில்லாமல் வரலாம்.

இங்கு வாழும் மக்களை, எல்லோரும் வந்து பார்க்க வேண்டும். இந்த மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

(வவுனியா விஷேட நிருபர்)


Add new comment

Or log in with...