ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு

ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு-Two Japan Maritime Self-Defense Force Ships Arrive in Colombo

ஜப்பானிய தற்காப்பு கடற் படையின், மைன்ஸ்வீப்பர் பிரிவு ஒன்று (Minesweeper Division One) கப்பலான ‘URAGA’, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இன்றையதினம் (02) ‘HIRADO’ எனும் கப்பல் வந்தடைந்துள்ளது.இந்தப் போர்க்கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்கப்பட்டன.

ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு-Two Japan Maritime Self-Defense Force Ships Arrive in Colombo

குறித்த ஜப்பானிய தற்காப்பு கடற் படையின் முதலாவது கண்ணிவெடி அகற்றும் படையின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NOGUCHI Yasushi செயற்படுகிறார். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Minesweeper Tender போர்க் கப்பலான 'URAGA' ஆனது, 141 மீற்றர் நீளம் கொண்டது என்பதுடன் அது 130 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதன் கட்டளை அதிகாரியாக தளபதி KONDO Koji உள்ளார். Minesweeper Ocean வகை போர்க்கப்பலான 'HIRADO' வின் நீளம் 67 மீற்றர் என்பதுடன் அது 55 பேரைக் கொண்டுள்ளது. அதன் கட்டளையிடும் அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் ITO Akira செயற்படுகின்றார்.

ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு-Two Japan Maritime Self-Defense Force Ships Arrive in Colombo

இரண்டு போர்க்கப்பல்களும் பெப்ரவரி 28ஆம் திகதி கொழும்பு கடற்கரையில் இலங்கை கடற்படையின் Sindurala கப்பலுடன் கூட்டு கடற்படை பயிற்சியில்  வெற்றிகரமாக ஈடுபட்டதன் பின்னர், இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய தற்காப்பு கடற்படையின் போர்க்கப்பல்கள் தொடர்பான விடயங்கள் தற்போது அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய  மேற்கொள்ளப்படுவதுடன், அக்கப்பல் மார்ச் 03ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது.
 


Add new comment

Or log in with...