பேஸ்புக், ட்விட்டர், யூடியுப் நிறுவனங்களுக்கு நெருக்கடி

அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், உக்ரைன் விவகாரம் குறித்து முடிவெடுக்க சிரமப்படுவதாக நம்பப்படுகிறது.

பேஸ்புக், ட்விட்டர், யூடியுப் போன்ற பிரபலமான சேவைகள் ரஷ்யாவுக்கு எதிராகத் தடைகளை விதிக்க வேண்டும் என்று மேற்குலக நாடுகள் நெருக்குதல் அளிக்கின்றன.

இருப்பினும் அத்தகைய தடைகள் அவற்றின் வருமானத்தைப் பெரிய அளவில் பாதிக்கலாம் என்று நிறுவனங்கள் அஞ்சுகின்றன. ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ைரன் மீது 4 நாட்களுக்கு முன்னர் படையெடுத்தது. அதையடுத்து, ஆப்பிள், கூகுள், நெட்பிளிக்ஸ் போன்ற நிறுவனங்களிடம் ரஷ்யாவுக்குச் சேவைகள் வழங்குவதை நிறுத்தும்படி உக்ரைன் கேட்டுக்கொண்டது.

இந்நிலையில், ரஷ்யாவில் அதன் சேவைகள் கட்டுப்படுத்தப்படுவதாய் ட்விட்டர் தெரிவித்தது. மேற்கத்தேய நாடுகளின் சில நிறுவனங்கள், ரஷ்யர்கள் உண்மையான தகவல்களைப் பெறும் வாய்ப்பை அளித்துவருவது சுட்டிக்காட்டப்பட்டது.

அதன் செயல்கள் குறித்து ரஷ்ய மக்கள் தெரிந்து கொள்வதைத் தடுக்க, ரஷ்ய அரசாங்கம் இணையத்தில் பகிரப்படும் தகவல்களை முடக்குவதில் தீவிர முயற்சிகளில் ஈடுபடுவதாக நம்பப்படுகிறது.


Add new comment

Or log in with...