கொவிட்: இந்திய தொடரிலிருந்து வணிந்து ஹசரங்க நீக்கம்

கொவிட்: இந்திய தொடரிலிருந்து வணிந்து ஹசரங்க நீக்கம்-Wanidu Hasaranga Tested Positive in His Latest PCR

- குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்சணவும் சந்தேகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வணிந்து ஹசரங்க, நாளை (24) ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான ரி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் உள்ள அவருக்கு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையில் அவருக்கு இன்னும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் (SLC) நிறுவனம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்குபற்றுவதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்த அவருக்கு பெப்ரவரி 15ஆம் திகதி மேற்கொண்ட சோதனைனயில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அன்றையதினம் (15) இடம்பெற்ற 3ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியில் அவர் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு பின்னர் நேற்று (22) மேற்கொண்ட ரெபிட் அன்ரிஜென் (RAT) சோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கொண்ட PCR சோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்று முடிந்த இத்தொடரில் அவுஸ்திரேலிய அணி 5 - 1 என தொடரை கைப்பற்றியிருந்தது.

இதேவேளை, குறித்த தொடரில் பங்குபற்றிய குசல் மெண்டிஸ் மற்றும் மஹீஷ் தீக்‌ஷண ஆகியோரும் காயம் காரணமாக இடம்பெறுவார்களா என சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


Add new comment

Or log in with...