ஹேமசிறி பெனாண்டோ நிரபராதி என விடுதலை

ஹேமசிறி பெனாண்டோ நிரபராதி என விடுதலை-Easter Sunday Attacke-Former Defence Secretary Hemasiri Fernando Acquitted

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ நிரபராதி என விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (18) மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல் அறிந்த போதிலும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் நிரபராதி என விடுதலை செய்ய, மூவர் அடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து கடந்த 2019 ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் 800 இற்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த வழக்கில் அவருக்கு குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டுகள், முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மீதும் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...