நாடு முழுவதிலும் உள்ள கிளைகளின் ஊடாக பேண்தகு முயற்சிகளை விரிவுபடுத்தும் Alliance Finance

Alliance Finance Co. PLC, (AFC), நாட்டை வலுவூட்டுவதற்காக கட்டுப்படியாகும் முழுமையான பேண்தகு நிதி தீர்வுகளை வழங்குவதில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் கூடிய இலங்கையின் பழமையான நிதி நிறுவனமாகும். AFC  தனது நாடு தழுவிய கிளை வலையமைப்பின் மூலம் அதன் பேண்தகைமை முயற்சிகளை விரிவுபடுத்துவதற்கு ஒரு படி முன்னேறியுள்ளதன் அடையாளமாக AFC  கிளை பேண்தகைமை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது "AFC  உதவும் கை" என்று அழைக்கப்படுவதுடன், தொற்றுநோய்க்கு எதிராக போராட இலங்கையர்களின் வாழ்வை உயர்த்துவதற்கும் உதவுவதற்கும் உதவும்.  இந்த முயற்சியானது இன்றுவரை பல நிறைவு செய்யப்பட்ட திட்டங்களைக் கொண்டுள்ளதுடன், கோவிட் - 19 இன் சவால்களுக்கு மத்தியில் 30 க்கும் மேற்பட்ட திட்ட செயல்படுத்தல்களை முன்னெடுத்து வருகின்றது.

AFCயின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிய கிளை வலையமைப்பானது, அந்தந்த பிராந்தியங்களில் சமூகங்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டது. AFC மருத்துவமனைகளுக்கு ஏராளமான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக அளித்ததுடன், கோவிட் - 19 க்கு எதிராக முன்னெடுக்கப்படும் போரை நோக்கி கைகொடுத்தது. AFCசியின் கிளை வலையமைப்பால் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட திட்டங்களில், கிளிநொச்சி கிளை கிளிநொச்சி மருத்துவமனைக்கு ஒரு ஈசிஜி இயந்திரத்தை வழங்கியது, பலாங்கொடை கிளை பலாங்கொடை ஆதார மருத்துவமனைக்கு ஒரு செலைன் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியது. தெஹியத்தகண்டிய கிளை, ஒட்சிசன் செறிவூட்டல் இயந்திரத்தை தெஹியத்தகண்டிய ஆதார மருத்துவமனைக்கு நன்கொடையளித்ததுடன், களுத்துறை மற்றும் அளுத்தகமை கிளைகள் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை கட்டுகஹஹேனா கிராமப்புற மருத்துவமனைக்கும் மற்றும் ஹோமாகம கிளை கிலிமலே கிராமப்புற மருத்துவமனைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களையும் வழங்கின. சமூகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு, புத்தளம் கிளை செம்மண்தலுவ ஆரம்பப்பாடசாலை கட்டிடத்தை புதுப்பிக்க நிதியுதவி வழங்கியது.

AFC உதவும் கை திட்டம் பற்றி கருத்து தெரிவித்த துணைத் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரோமானி டி சில்வா, “எங்கள் சொந்த சமூகங்களை ஆதரிப்பதற்காக இந்த திட்டங்களை நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் தொடங்குகிறோம். அனைத்து AFC கிளைகளும் அந்தந்த இடங்களின் மிக முக்கியமான தேவைகளை பூர்த்தி செய்ய இந்த திட்டத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளன. தொற்றுநோயுடன் நாங்கள் மிகவும் சவாலான காலகட்டத்தில் இருக்கிறோம். சமூகப் பொறுப்புள்ள நிறுவனமாக, இந்த நேரத்தில் சுகாதாரத் துறைக்கு உதவுவதில் நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம். AFC கிளைகள் மூலம் நாடு முழுவதும் எங்கள் உதவும் கை திட்டத்தை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவதோடு நிலையான பேண்தகு முயற்சிகளில் முக்கிய பங்கு வகிப்போம்," என்றார்.

AFC 1956 இல் தொடங்கப்பட்டதிலிருந்து சமூக ஆதரவு முயற்சிகளில் முன்னணியில் உள்ளது. கடந்த தசாப்தத்தில், தேசிய மற்றும் உலகளாவிய பேண்தகைமை முன்னுரிமைகளை ஆதரிப்பதற்காக கவனம் செலுத்தும் நிலையான பெறுமதி உருவாக்கத்தை உறுதி செய்வதற்காக AFC  ஒரு வியாபார மாதிரியை வணிகத்தில் உருவாக்கியுள்ளது.

சமூக தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி, உயிர் பன்முகத்தன்மை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்பு, சுத்தமான ஆற்றல் மற்றும் பூஜ்ஜிய உமிழ்வு முயற்சிகள் ஆகியவற்றை ஆதரிப்பது போன்றன நிறுவனத்தின் ஏனைய பேண்தகு முயற்சியகளாகும். இந்த முயற்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கு பங்களிப்பு செய்வனவாக உள்ளன.


Add new comment

Or log in with...