2022ஆம் வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

2022ஆம் வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்-Speaker Endorses the First Act for the Year 2022

மஹபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்த்தன நேற்று முன்தினம் (14) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், திருத்தங்களுடன் இது நிறைவேற்றப்பட்டிருந்தது.

இதன் ஊடாக 1981ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் பெறுவது உள்ளிட்ட திருத்தங்களுக்கு உள்ளாகிறது.

இதற்கமைய 2022ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டம் பெப்ரவரி 14 முதல் நடைமுறைக்கு வருகிறது.


Add new comment

Or log in with...