வணிந்து ஹசரங்கவுக்கு கொவிட் தொற்று உறுதி

வணிந்து ஹசரங்கவுக்கு கொவிட் தொற்று உறுதி-Wanindu Hasaranga Tested Positive for COVID19

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வணிந்து ஹசரங்கவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் அவுஸ்திரேலிய அணியுடன் இன்று (15) இடம்பெறவுள்ள 3ஆவது ரி20 கிரிக்கெட் போட்டியில் அவர் இடம்பெறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இடத்திற்கு பந்துவீச்சாளரான ஜெப்ரி வண்டர்சே இணைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்போட்டி இன்று (15) பி.ப. 1.40 மணிக்கு அவுஸ்திரேலியாவின் கென்பரா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

2022 IPL தொடருக்கான வீரர்களை தெரிவு செய்வதற்காக அண்மையில் இடம்பெற்ற ஏலத்தில், 10.75 கோடி இந்திய ரூபாவுக்கு வணிந்து ஹசரங்க ரோயல் சலஞ்சர்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...