குழந்தைகளுடன் யாசகத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து நீதியமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
சிலர் சிறுவர்களை வைத்து யாசகம் எடுப்பதில் ஈடுபடுவதாக, பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, அண்மையில் நீதியமைச்சரை சந்தித்து, நெடுஞ்சாலைகளில் சிறுவர்களை வைத்து யாசகம் எடுப்பதற்கு காரணமானவர்களுடன் தற்போதைய சட்ட நிலைமை குறித்து கலந்துரையாடியிருந்தார்.
சிறுவர்களை யாசகம் எடுப்பதற்கு பயன்படுத்துவதை தடுப்பதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் ஆதரவும் இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
Add new comment