இலங்கை ரி20 தொடரில் இணைக்கப்பட்ட டேனியல் சேம்ஸ்

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டேனியல் சேம்ஸ், இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் ஆடவுள்ள 5 போட்டிகள் கொண்ட ரி 20 தொடருக்குரிய அவுஸ்திரேலிய அணியில்இணைக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான ரி 20 தொடர் இம்மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் தொடர் ஆரம்பத்தின் போது அவுஸ்திரேலிய அணியில் உள்வாங்கப்பட்ட துடுப்பாட்டசகலதுறைவீரரான ட்ராவிஸ் ஹெட்டிற்கு, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்காக தெற்கு அவுஸ்திரேலிய அணிக்காக கழகமட்டப் போட்டியொன்றில் விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது.

எனவே டிராவிஸ் ஹெட் குறித்த கழகமட்டப் போட்டியில் விளையாடுவதால், இவரின் பிரதியீட்டு வீரராகவே டேனியல் சேம்ஸ் அவுஸ்திரேலிய ரி 20 அணியில் இணைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இலங்கை அணிக்கு எதிரான ரி 20 தொடரின் இறுதி இரண்டு போட்டிகளிலும் ட்ராவிஸ் ஹெட் அவுஸ்திரேலிய அணியில் இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கடந்த ஆண்டு ரி 20 உலகக் கிண்ணத்தின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மேலதிக வீரராக காணப்பட்டிருந்த டேனியல் சேம்ஸ், தனது தாயக அணியினை இதுவரை 4 20க்கு20 போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...