மடவளை - பங்களா கெதர சந்தியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் கடந்த 01ஆம் திகதி சிலிண்டர் வெடித்ததில், தீ விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ள ஹோட்டலொன்று புனரமைக்கப்பட்டு மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மடவளை வர்த்த சங்கத்தின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றையதினம் குறித்த ஹோட்டல் இன்று (10) கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 01ஆம் திகதி மாலை குறித்த ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து தீ விபத்துக்குள்ளாகிய பொழுது, அயலவர்களின் முயற்சியின் பயனாக குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டுவரப்பட்டிருந்தது.
கடந்த இரண்டரை வருடமாக வாடகை இடத்தில் ஹோட்டல் நடாத்திவரும் என்.எம். ஷிபான் என்பவர் குறித்த சேதம் தொடர்பிலான நஷ்டயீடுகளை உரியவர்களிடமிருந்து பெற்றுத்தருமாறு பொலிஸாரியிடம் முறையிட்டிருந்துள்ள போதிலும் இதுவரை எந்தவொரு நிவாரணங்களும் அவருக்கு கிடைத்திருக்கவில்லை.
இந்நிலையில் மடவளை வர்த்த சங்கம் முன்னெடுத்துள்ள இம்முயற்சி அவரின் வாழ்வாதார பிரச்சனைக்கு தீர்வாக அமைந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் குறிப்பிட்டார்.
(எம்.ஏ. அமீனுல்லா)
Add new comment