இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸுக்கு கொவிட் தொற்று

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸுக்கு கொவிட் தொற்று-Sri Lanka Tour of Australia-AUSvSL Fixtues

தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியில் உள்ளடக்கப்பட்டுள்ள அணியின் விக்கெட் காப்பளரான குசல் மெண்டிஸ் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், விக்கெட் காப்பாளரான குசல் மெண்டிஸ் அணியில் இல்லாத நிலையில் விக்கெட் காப்பாளர் கடமையை தினேஷ் சந்திமால் புரிய வாய்ப்புள்ளதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் குசல் மெண்டிஸுக்கு கொவிட் தொற்று-Sri Lanka Tour of Australia-AUSvSL Fixtues

இவ்வணியில் இணைக்கப்பட்டிருந்த சாமிக்க கருணாரத்ன அண்மையில் இலங்கையில் வைத்து கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில், தற்போது குணமடைந்துள்ளார் என்பதுடன், அவர் இன்று இரவு அவுஸ்திரேலியா பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Add new comment

Or log in with...