2021 O/L விண்ணப்ப முடிவுத் திகதி பெப்ரவரி 17 வரை நீடிப்பு

2021 O/L விண்ணப்ப முடிவுத் திகதி பெப்ரவரி 17 வரை நீடிப்பு-GCE-OL-Application-Deadline-Closing-Date-Extended-Feb-10

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி, பெப்ரவரி 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நிறைவடையவிருந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் கால அவகாசம் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், எல்.எம்.டி. தர்மசேன விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் பெப்ரவரி 03வரை நீடிக்கப்பட்டிருந்த குறித்த விண்ணப்பம் கோரும் இறுதித் திகதி பெப்ரவரி 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில், அது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, Online முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான 'Exams Sri Lanka' (Android | iOS) ஊடாக, அறிவுறுத்தல்களை பின்பற்றி விண்ணப்பிக்கலாமென திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க பாடசாலைளில், அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள User name மற்றும் Password மூலம் குறித்த இணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் மேற்படி இணையத்தளத்தில் தங்களது தே.அ.அ. இலக்கம் உள்ளிட்ட விபரங்களை வழங்கி பதிவு செய்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதுடன், அதன் அச்சுப்பிரதியை பெற்று உரிய சந்தர்ப்பங்களில் சமர்ப்பிப்பதற்காக தம்வசம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...