கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பீ. வணிகசிங்க நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பீ. வணிகசிங்க நியமனம்-Thusitha P Wanigasinghe Re Appointed as Chief Secretary of the Eastern Province

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பீ. வணிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பீ. வணிகசிங்க, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவராவார்.

கடந்த 2019 டிசம்பர் மாதத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...