சுகாதார அமைப்பின் தலைவர் பதவியில் கெப்ரியேசஸ் நீடிப்பு

உலக சுகாதார அமைப்பின் தலைவரை தேர்வு செய்யும் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் ஒரே வேட்பாளராக போட்டியிட தற்போதைய தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசஸ் தேர்வாகி இருக்கும் நிலையில் அவர் அந்தப் பதவியை தக்கவைத்துள்ளார்.

ஐ.நா சுகாதார அமைப்பின் முதல் ஆபிரிக்க தலைவராக இருக்கும் அவர், தமக்கு மீண்டும் ஆதரவு அளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று சபையின் இரகசிய வாக்கெடுப்பில், கெப்ரியேசஸை ஒரே வேட்பாளராக நிறுத்த தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி வரும் மே மாதம் உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகளும் அளிக்கவுள்ள அடுத்த செயலாளர் நாயகம் பதவிக்கான வாக்கெடுப்பில் எத்தியோப்பியாவின் முன்னாள் சுகாதார மற்றும் வெளிவிவகார அமைச்சராக இருந்த கெப்ரியேசஸ் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்–19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பெரிதும் அறியப்பட்ட ஒருவராக அவர் உள்ளார்.


Add new comment

Or log in with...