தென் கொரியாவில் கொரோனா உச்சம்

தென் கொரியாவில் கொவிட்–19 வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை முதல் முறையாக 13,000ஐத் தாண்டியுள்ளது. கடந்த செவ்வாயன்று 8,000 சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.

எளிதில் பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரோன் திரிபு முழுவீச்சில் தொற்றுவதாகத் தென் கொரிய பிரதமர் கிம் பூ கியூம் கூறினார்.

கடந்த சனிக்கிழமையிலிருந்து புதிய பரிசோதனை நடைமுறை ஆரம்பிக்கப்படும்; என்றும் அவர் அறிவித்தார்.

எதிர்வரும் சந்திரப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தின்போது பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


Add new comment

Or log in with...