பிட்கொயின் மின்னிலக்க நாணயத்தின் சட்டபூர்வத் தன்மையை மீளப்பெறும்படி எல் சால்வடோர் நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) அழுத்தம் கொடுத்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு இணையாக அனைத்து பரிவர்த்தனைகளிலும் மின்னிலக்க நாணயத்தை பயன்படுத்துவதற்கு உலகில் முதல் நாடாக வாடிக்கையாளர்களுக்கு கடந்த செப்டெம்பர் மாதம் எல் சால்வடோர் அனுமதி அளித்தது.
இந்த முடிவு லத்தீன் அமெரிக்காவின் வறிய நாட்டில் ஸ்திரமற்ற சூழல் மற்றும் பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்று பாரிய ஆர்ப்பட்டங்களைத் தூண்டியது.
கடந்த நவம்பர் தொடக்கம் பிட்கொயின் தனது பெறுமதியில் சுமார் பாதி அளவை இழந்துள்ளது.
இந்த மின்னிலக்க நாணயத்தால் நாடு எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றி ஜனாதிபதி நயிப் புகேலேவை எச்சரித்த நாணய நிதியம், இது தமது நிறுவனத்தில் இருந்து கடன் பெறுவதை கடினமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
பிட்கொயின் நாணயத்தின் பெறுமதி கணிசமான ஏற்ற இறக்கங்களை சந்திப்பதால் ஒரு சர்ச்சைக்குரிய நாணயமாக இருந்து வருகிறது.
Add new comment