15 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

ஹட்டன் போடைஸ் பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா பட்டல்கல பகுதியிலே இன்று (27) காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி அதி வேகமாக வந்த முச்சக்கவண்டியே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகளை முன்னெடுப்பதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம்.கிருஸ்ணா)


Add new comment

Or log in with...