இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு

இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் நேற்று (26)யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.   யாழ்ப்பாணம் மருதடி வீதியிலுள்ள இந்தியதூதரகத்தில் பதில் துணைத்தூதுவர் ராம் மகேஷ் தலைமையில் குடியரசு தின நிகழ்வுகள் நேற்று காலை இடம்பெற்றது.  

தேசிய கொடியை ஏற்றி வைத்ததுடன், குடியரசு தலைவரின் உரையையும் வாசித்தார்.   அதன் பின்னர், இந்திய கலாசார நிலையத்தில் இசைக்கல்விபயிலும் மாணவர்களின் தேசப்பற்று பாடல்கள் இசைக்கப்பட்டதுடன், இந்திய கடலோர காவல்படை யினர் தேசப்பற்று பாடல்களையும் பாடினார்கள்.

இந்நிகழ்வில் துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன் உட்பட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள், இந்திய மக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் குறூப், யாழ்.விசேட நிருபர்கள் 


Add new comment

Or log in with...