Thursday, January 27, 2022 - 4:10pm
மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வரட்சி காலநிலையால் கடியன்லென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் குறைவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கடியன்லென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை, நாவலப்பிட்டிய வீதியில் கடியன்லென நகருக்கு அருகில் அமைந்துள்ள கடியன்லென நீர்வீழ்ச்சியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபல்யமான நீர்வீழ்ச்சியாகும். நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக இந்த நாட்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக கடியன்லென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை குறூப் நிருபர்
Add new comment