எதிர்வரும் பெப்ரவரி 11ஆம் திகதி அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இடம்பெறவுள்ள 5 ரி20 போட்டிகளைக் கொண்ட சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் பங்குபற்ற தசுன் ஷானக தலைமையிலான 20 பேர் கொண்ட அணி பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற லங்கா ப்ரீமீயர் லீக் தொடரில் திறமை காட்டிய புதுமுக வீரர்களும் இவ்வணியில் இணைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
குறித்த அணிக்கு விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அனுமதி கிடைத்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா செல்லும் இலங்கை அணி, சிட்னி, பிரிஸ்பன், கராரா, அடிலைட், மெல்பேர்ன் மைதானத்தில் 5 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதேவேளை, இத்தொடருக்கான அவுஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இலங்கை அணி விபரம் வருமாறு:
- தசுன் ஷானக (தலைவர்)
- சரித் அசலங்க (பிரதி தலைவர்)
- அவிஷ்க பெனாண்டோ
- பெத்தும் நிஸ்ஸங்க
- தனுஷ்க குணதிலக
- குசல் மெண்டிஸ்
- தினேஷ் சந்திமால்
- சாமிக கருணாரத்ன
- ஜனித் லியனகே
- கமில் மிஸார
- ரமேஷ் மெண்டிஸ்
- வணிந்து ஹசரங்க
- லஹிரு குமார
- நுவன் துஷார
- துஷ்மந்த சமீர
- பினுர பெனாண்டோ
- மஹீஷ் தீக்ஷண
- ஜெப்ரி வன்டர்சே
- பிரவீன் ஜயவிக்ரம
- ஷிரான் பெனாண்டோ
Add new comment