மின்சார சபை தலைவர் இராஜினாமா

மின்சார சபை தலைவர் இராஜினாமா-CEB Chairman MMC Ferdinando Resign from His Post

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியில் இருந்து எம்.எம்.சி. பெர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக, எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தான் இராஜினாமா செய்வதாக, அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதிக் நன்றி தெரிவித்துள்ள அவர், மின்சார சபை பணிப்பாளர்கள், ஊழியர்கள் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

எம்.எம்.சி. பெர்டினாண்டோ கடந்த வருடம் ஜூலை 19ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் அவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

மின்சார சபை தலைவர் இராஜினாமா-CEB Chairman MMC Ferdinando Resign from His Post


Add new comment

Or log in with...