தென்னாபிரிக்காவில் இருந்து ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்றின் சக்கரம் உள்ள பகுதியில் ஒருவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜொஹன்னஸ்பர்க்கில் இருந்து ஆம்ஸ்டர்டாம் வரை சுமார் 11 மணி நேரம் பறந்த இந்த சரக்கு விமானம் கென்யாவின் நைரோபி நகரில் பயணத்தின் இடையே நிறுத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
நீண்டதூரப் பயணத்தில் குளிர், குறைவான ஒட்சிசன் மற்றும் அதிக உயரத்தில் விமானத்தின் வெளிப்புறத்தில் ஒருவர் உயிர் தப்புவது மிக அசாதாரணமான ஒன்றாக உள்ளது.
“விமானத்தின் முன் சக்கர பகுதியில் ஆடவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சீரான உடல் நிலையுடன் உள்ளார்” என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
“அந்த மனிதர் தொடர்ந்தும் உயிரோடு இருந்தது ஆச்சரியமான ஒன்று” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add new comment