இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா வெற்றிக்கிண்ணமானது வடமாகாண விளையாட்டு கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டி கடந்த 22ஆம் திகதி பிற்பகல்கிளிநொச்சி வடமாகாண விளையாட்டு கட்டடத்தொகுதி மைதானத்தில் ஆரம்பமானது.

வடமாகாணத்தை சேர்ந்த ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 25விளையாட்டு கழகங்கள் பங்கு பற்றுகின்ற போட்டியில் முதல் நாளின் முதலாவது போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த இரு அணிகள் போட்டியிட்டன.

இதில் நாச்சிக்குடா சென் ஜேம்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து திருநகர் விளையாட்டுக்கழகம் மோதிக்கொண்டது விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இரு அணிகளும் ஒவ்வொரு கோல்களை போட்ட நிலையில் வெற்றியை தீர்மானிப்பதற்கு தண்டனை உதை முறை (பனாட்டி) க்கு விடப்பட்டபோது திருநகர் விளையாட்டுக்கழகம் 3 - 2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

விலகல் முறையில் நடைபெறும் குறித்த போட்டியின் முதல் சுற்று போட்டி இன்றும் நாளையும் எதிர்வரும் 29, 30ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது.

கால் இறுதிப் போட்டி பெப்ரவரி 05ஆம் திகதியும், அரையிறுதி போட்டி பெப்ரவரி 06ஆம் திகதியும் இறுதிப் போட்டி பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது.

இறுதிப்போட்டிக்கு இராணுவத் தளபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிளிநொச்சி குறூப் நிருபர்


Add new comment

Or log in with...