அத்தியாவசிய ஆவணங்களை பாதுகாக்க புதிய செயலி

கைபேசிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகம்!

சகல பிரஜைகளும் டிஜிட்டல் செயலி வசதிகளை வைத்துக்கொள்வதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, வெளிநாட்டு கடவுச்சீட்டு, பிறப்புச்சான்றிதழ் மற்றும் திருமணச்சான்றிதழ் உள்ளிட்ட சகல அத்தியாவசிய தனிப்பட்ட ஆவணங்களையும் தங்களது கையடக்க தொலைபேசிகளில் டிஜிட்டல் செயலிகளாக வைத்துக்கொள்வதற்கான வசதிகள் இதன்மூலம் கிடைக்கப்பெறவுள்ளன.

இளைஞர் விவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இணைந்து செயற்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தினை இரண்டரை வருட காலத்தில் நிறைவுறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த வருடத்திற்குள் 100 நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், வரி மற்றும் ஏனைய கட்டணங்களை டிஜிட்டல் தொழிநுட்பத்தின் ஊடாக பொதுமக்கள் செலுத்த முடியும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...