தடுப்பூசி செயற்திட்டத்திற்கு ஒரு வருடம் பூர்த்தியாகிறது

29ஆம் திகதி பிரதமர் தலைமையில் சர்வமத வழிபாடு

நாட்டில் தடுப்பூசி செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவுபெறுவதையொட்டி எதிர்வரும் 29ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் சுகாதார அமைச்சில் விசேட வைபவமொன்று நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த வைபவத்தில் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ள சுகாதாரத்துறை விசேட நிபுணர்கள், மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

அன்றைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள 1100 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் விசேட சமய வழிபாட்டு நிகழ்வுகள் இடம் பெறுவதுடன் விளக்குகளில் ஒளியேற்றும் சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை பிரதமரின் தலைமையில் சுகாதார அமைச்சில் பிரதான வைபவம் நடைபெற உள்ள நிலையில், நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் முற்றாக ஒழிய வேண்டி விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...