ரஞ்சனுக்கு எதிரான 2ஆவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 09 இல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீதான இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (24) உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் ரஞ்சன ராமநாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய கருத்துகளில் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சட்ட மா அதிபரினால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக இவ்வழக்குத் தாக்கல் செய்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வருவதோடு, குறித்த சிறைத்தண்டனை காரணமாக அவர் தனது எம்.பி. பதவியையும் இழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...