Monday, January 24, 2022 - 3:48pm
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
மின்சாரப் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்தே இன்று மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான ஒரு மணி நேர திட்டமிட்ட வகையிலான மின் துண்டிப்பு இடம்பெறுமென ஏற்கனவே மின்சாரசபை பொறியியலாளர் சங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment