யூத படுகொலையை மறுப்பதை எதிர்த்து ஐ.நா புதிய தீர்மானம்

நாஜிக்களின் யூதப் படுகொலையை மறுப்பதை எதிர்க்கும் நோக்கில் ஐ.நாவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருப்பதோடு யூத எதிர்ப்புக்கு எதிராக போராடுதவதற்கு உதவும்படி உறுப்பு நாடுகள் மற்றும் சமூக ஊடக நிறுவனங்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம் 193 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையில் வாக்கு இன்றி நிறைவேற்றப்பட்டது.

‘இந்த நடவடிக்கை வரலாற்று உண்மையை மறுப்பது அல்லது திரித்துக் கூறுவதற்கு எதிரான வாலுவான செய்தியாக உள்ளது’ என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய யூத மக்களுக்கு எதிராக நாஜி ஜெர்மனி மேற்கொண்ட நடவடிக்கையில் ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஐ.நா பொதுச் சபை கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘யூதப் படுகொலை என்ற வரலாற்று நிகழ்ச்சியை முழுமையாக அல்லது பகுதி அளவில் நிராகரிப்பதை மறுக்கிறது மற்றும் கண்டிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...