அமெரிக்கா மற்றும் கூட்டணி ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை

எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்ய துருப்புகள் உக்ரைனுக்குள் நுழைந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பெர்லினில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்புக்குப் பின்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குல சக்திகளின் உறுதிப்பாட்டுடன் ரஷ்யாவுக்கு நிகராக நிற்க முடியாது என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் குறிப்பிட்டுள்ளார்.

“ரஷ்யா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பை தொடுத்தால், அது பிராந்தியத்தை ஆபத்தான மற்றும் ஸ்திரமற்ற நிலைக்கு இழுத்துச் செல்லும் என்பதோடு அனைவரும் போர்ச் சூழலுக்கு முகம்கொடுப்பார்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு தொடுக்கும் திட்டம் இல்லை என்று ரஷ்யா வலியுறுத்தும் அதேநேரம் பதற்றத்தைத் தணிக்க நேட்டோவில் உக்ரைன் இனைவதை தடை செய்வது உட்பட தீவிரமான நிபந்தனைகளை விதித்து வருகிறது.

 


Add new comment

Or log in with...