கறுப்பு வைரம் ஏலம்

விண்வெளியிலிருந்து வந்ததாக நம்பப்படும் 555.55 கெரட் கறுப்பு வைரக்கல் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.

வைரத்தை ஏலத்திற்கு வைக்கவிருக்கும் சௌதபி நிறுவனம் அது 6.8 மில்லியன் டொலர் வரை விலை போகலாம் என்று நம்புகிறது.

இவ்வளவு பெரிய அளவில் கறுப்பு வைரக்கல் இருப்பது மிகவும் அரிது என்று வர்ணிக்கப்பட்டது.

சிறு கோளோ விண்கல்லோ பூமி மீது மோதியதில் கறுப்பு வைரம் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பொதுவாக விண்கற்களில் காணப்படும் கனிமங்கள் அவற்றுள் இருப்பது கறுப்பு வைரங்களின் சிறப்பு என்று கூறப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...