ஜோகோவிச் ஏன் விளையாட அனுமதிக்கப்படாமல் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டார்?

அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அவரின் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளது.

34 வயது ஜோகோவிச் பகிரங்க டென்னிஸ் போட்டியில் விளையாட அனுமதிக்கப்பட்டால் அது தடுப்பூசிக்கு எதிரான ஆரப்பாட்டங்களை தூண்டிவிடலாம் என்று அதிகாரிகள் அச்சம் கொண்டதாக நீதிமன்றம் கூறியது.

அனுமதி மறுக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் இருந்தபோதும் இந்தக் காரணம் முதன்மையானது என்றும் அது குறிப்பிட்டது.

உலக டென்னிஸ் வீரர் ஜோகோவிச் இதுபோன்ற தடையை மற்ற Grand Slam டென்னிஸ் போட்டிகளிலும் எதிர்நோக்குகிறார்.

விம்பிள்டன் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் அவருக்கு அனுமதி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் தரமுடியாது என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் பிரான்சும், அமெரிக்ககாவும் டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விதிமுறைகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்று கூறியுள்ளனர்.


Add new comment

Or log in with...