Sunday, January 23, 2022 - 4:54pm
விற்பனை நோக்கில் கடலாமையைப் பிடித்து வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தென்மராட்சி, கச்சாய் பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கச்சாய் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 36வயதான நபர் ஒருவரே இவ்வாறு கடலாமையுடன் கைதாகியிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை (20) இரவு கைதான குறித்த சந்தேகநபர் நேற்றுமுன்தினம் (21) வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தியதைத் தொடர்ந்து அவரை ஒன்றரை இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரி விசேட நிருபர்
Add new comment