வட கொரியா மீதான தடை: சீனா, ரஷ்யா முட்டுக்கட்டை

வட கொரியாவைச் சேர்ந்த ஐவர் மீது ஐ.நாவில் தடை விதிக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகளை, சீனாவும் ரஷ்யாவும் தடுத்துள்ளன.

அந்த ஐவரும் பியோங்யாங்கின் ஏவுகணை, ஆயுதத் திட்டங்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே தன்னிச்சையான தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

பியோங்யாங் மீது நெருக்குதலை அதிகரிப்பதற்கு பீஜிங்கும் மொஸ்கோவும் நீண்ட காலமாகவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. மாறாக ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவுகளைத் தளர்த்தும்படி அவை பரிந்துரைத்துள்ளன.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையைத் அரம்பிப்பதற்கான சூழலை அது உருவாக்கும் என்று சீனாவும் ரஷ்யாவும் நம்புகின்றன.


Add new comment

Or log in with...