டயலொக் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டி திகனவில்

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு வழங்குனரான டயலொக், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக 2021 டயலொக்தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பை நடத்துவதன் மூலம், இலங்கையில் விளையாட்டை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து உறுதியளிக்கும். இந்த போட்டி தொடர் இன்றும் நாளையும் கண்டி தினகவில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு 2021 டயலொக் தேசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப்பில் நாடு முழுவதிலுமிருந்து 34 அணிகள் போட்டியிடுகின்றன. அதன் ஆரம்ப சுற்றுகள் லீக் முறையில் விளையாடப்படும் மற்றும் இறுதிப் போட்டிகள் நொக் அவுட் முறையில் விளையாடப்படும்.

இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் முதன்மையான போட்டியான டயலொக் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டியின் நோக்கமானது திறமையான வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் நடுவர்களை இனங்கண்டு அவர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு உயர் மட்டத்தில் பயிற்றுவிப்பதாகும்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக தேசிய வலைப்பந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டயலொக் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப், தேசிய மட்ட வீரர்களின் தாளத்தை போட்டித்தன்மையுடன் வைத்திருப்பதற்கும் திறமையான புதியவர்களை அடையாளம் காண்பதற்கும் உறுதுணையாக இருக்கும்.

டயலொக் தேசிய கிரிக்கெட், கரப்பந்து மற்றும் வலைப்பந்து அணிகளுக்கு உத்தியோகபூர்வ அனுசரணையாளராகவும் உள்ளது.

ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்து போட்டிக்கு மேலதிகமாக, தேசிய கனிஷ்ட வலைப்பந்து போட்டி, ரக்பி கழகங்கள், பிரீமியர் கால்பந்து போட்டி, பாடசாலை ரக்பி போட்டி, இராணுவ பரா விளையாட்டு போட்டி, தேசிய பரா விளையாட்டு போட்டி, ஒலிம்பிக் விளையாட்டு, இலங்கை பரா விளையாட்டு மற்றும் உலக பராலிம்பிக் போட்டிகள் உள்ளன.


Add new comment

Or log in with...