சுமார் 85 கி.கி. கஞ்சாவுடன் தம்பதி கைது

சுமார் 85 கி.கி. கஞ்சாவுடன் தம்பதி கைது-Couple Arrested with 85kg Ganja-Chulipuram Jaffna

- யாழ்.  சுழிபுரத்தில் சம்பவம்

சுமார் 85 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (21) வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவும் கடற்படையும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மூன்று உரப்பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 85 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுழிபுரம், பறாளை பகுதியில் உள்ள வீட்டு வளாகத்திலிருந்து கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் 36 வயதுடைய கணவரும் அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்கள் இருவரும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். விசேட நிருபர் 


Add new comment

Or log in with...