சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பண்டாரவளை நகரில் அபிவிருத்தி பணிகள்

உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள்

'நூறு நகரங்கள்' வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திக்கு உட்படும் நகரங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களின் பொருளாதாரத்தை தரமுயர்த்தல், அதற்கான வருமான வழிகளை அதிகரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நகர அபிவிருத்தி, திண்மக்கழிவு அகற்றல் மற்றும் பொது சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவின் மேற்பார்வையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையினூடாக இந்த அபிவிருத்தி செயற்றிட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் இந்த 'நூறு நகரங்கள்''அபிவிருத்தி திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.

அதற்கமைய மரக்கறி வகைகள், நெல்வகை, பலவகைப் பூக்கள், தேயிலை, சுற்றுலா, கலாசார, தொல்பொருளியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் போன்ற எட்டு வகையைக் கொண்டு பண்டாரவளை நகரை மேலும் மேம்படுத்தி அதன் அபிவிருத்தி செயற்றிட்ட பணிகள் முடிவடையும் தறுவாயில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்தது.

மேல் குறிப்பிட்ட எட்டு பொருளாதார வளர்ச்சி தரும் வருவாய்களைத் தவிர மேலும் பல வருவாய் வழிகள் அநேகம் பண்டாரவளை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் கீழ் பண்டாரவளை நகரினுள் அமைக்கப்பட்டுள்ள 'ரோஜா பூங்கா' நகருக்கு மேலும் அழகைக் கொடுக்கின்றது. அந்த ரோஜா தோட்டம் மின்விளக்குகளால் அலங்காரமும் செய்யப்பட்டு வருகின்றது.

நகரின் பிரதான வீதியின் நடுப்பகுதியில் 600 மீற்றர் தூரம் வரை நிர்மாணிக்கப்பட்ட நடைபாதை ஒழுங்கை, முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கல் பதிக்கப்பட்ட ஒழுங்கையினால் மக்கள் வீதியை விட்டு பயணிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தப்பட்டு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வாகன நெரிசல் குறைவடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரில் சிறிய நடுத்தர பாரிய அளவில் பூந்தோட்டங்களும் பழவகைகள் கன்றுகள் நடுகையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களின் பாவனைக்காக வர்த்தக மற்றும் வீட்டுப் பாவனைகளுக்குத் தேவையான மரக்கறிகள் உற்பத்தி செய்வதன் மூலம் அநேகர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருமானத்தை பெற்று வருகின்றனர்.

இந்த நூறு நகரங்களின் அடிப்படையில் பண்டாரவளை நகரை அபிவிருத்தி செய்வதன் மூலம் மரக்கறி மற்றும் பழவகைகள் ஆகியவற்றுக்கு நல்ல வரவேற்புள்ளது.

முக்கியமாக நகரை அழகுபடுத்துவதுடன் பண்டாரவளை நகருக்கு வருகை தரும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகமாக எதிர்பார்க்கலாம் என்பதுடன் அதனூடாக பண்டாரவளை நகரின் மரக்கறி மற்றும் பழவகை விற்பனை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனைத் தவிர தேயிலை உற்பத்தியினால் ஏற்றுமதி இலாபத்தையும் அரிசியினால் உள்ளூர் விற்பனையும் பெறலாம். சுற்றுலா செயற்றிட்ட கைத்தொழிலை செயல்படுத்துவதன் காரணமாக அந்நிய செலாவணி அதிகரித்து வருகின்றது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பும் இடங்களான உலக முடிவு, ஹக்கல பூந்தோட்டம், துங்கிந்த நீர்வீழ்ச்சி, ராவணா நீர்வீழ்ச்சி, கிரேகரி வாவி உள்ளிட்ட பலவற்றில் இருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் வருமானங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்துடன் பண்டாவளை சூழவுள்ள பகுதிகளில் வருமானம் பெறக் கூடிய கைத்தொழில்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தொல்பொருளியல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களாக முதியங்கன சீதை கோவில், திவுரம்வெல விஹாரை, ராவணா தோவ விஹாரை, எட்சம் பங்களா, போன்ற இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக வெலிமட சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுவும் வருமானத்தை பெருக்கும் மற்றுமொரு வழியாகும்.

இங்கு வருகை தரும் சுற்றுப்பயணிகள் கூறுவது என்னவெனில் உலகில் சிறந்த தூய்மையான ஒட்சிசன் காற்றினை பண்டாவளை மற்றும் எல்ல பகுதியில் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.

பண்டாரவளை, பதுளை, வெலிமடை, ஹப்புத்தளை, நுவரெலியா ஆகிய பகுதிகள் அங்கு வாழ்பவர்களும் வருகை தருபவர்களுக்கும் புத்துணர்ச்சியை வழங்குகின்றன. இனங்காணப்பட்ட வருவாய் வழிகளை மேம்படுத்த புதிய செயல்முறைகளை மேற்கொள்ளுமாறு பண்டாரவளை மக்கள் வேண்டுகின்றனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சரும் பிரதமருமான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரையின் பேரில், நகர அபிவிருத்தி, திண்மக்கழிவு அகற்றல் மற்றும் பொது சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவா மேற்பார்வையின் கீழ் , நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறினிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த நூறு நகர அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

டப்ளியூ.கே.பிரசாத் மஞ்சு
(நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் ஊடக செயலாளர்)


Add new comment

Or log in with...