பிரதமர் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பஸ்

பிரதமர் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பஸ்-New Bus for Colombo Royal College

- நிதியமைச்சராக இருந்த போது குறித்த பஸ்ஸின் இறக்குமதிக்கு வரிச்சலுகை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பஸ் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.

கீர்த்தி மந்த்ரிரத்னவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்த பேருந்து 54 ஆசனங்களை கொண்ட ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சொகுசு பஸ் ஆகும்.

நேற்று (21) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ். குணதிலகவிடம் பேருந்தின் திறப்பை உத்தியோகபூர்வமாக வழங்கிவைத்தார்.

பிரதமர் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பஸ்-New Bus for Colombo Royal College

அதனைத் தொடர்ந்து பேருந்திலுள்ள வசதிகளை பிரதமர் பார்வையிட்டார்.

பிரதமர் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பஸ்-New Bus for Colombo Royal College

இப்பேருந்தினை அன்பளிப்பாக வழங்கிய கீர்த்தி மந்த்ரிரத்னவுக்கு பிரதமர் நினைவுச் சின்னமொன்றை வழங்கியதுடன், கொழும்பு றோயல் கல்லூரியின் அதிபர் எம்.வீ.எஸ். குணதிலகவினால் பிரதமருக்கும் நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.

பிரதமர் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பஸ்-New Bus for Colombo Royal College

பிரதமர் நிதியமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமனாத் சீ தொலவத்தவின் தலையீட்டின் கீழ் இப்பேருந்திற்கான வரி நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தன. ஓய்வுபெற்ற உதவி அதிபர் அஷோக கலஹிடியாவ இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

பிரதமர் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பஸ்-New Bus for Colombo Royal College

குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமனாத் சீ தொலவத்த, கொழும்பு றோயல் கல்லூரியின் பிரதி அதிபர் கிரிஷாந்த சில்வா, கல்லூரியின் பெற்றோரை பிரதிநிதித்துவப்படுத்தி மஹேஷ் குணரத்ன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Add new comment

Or log in with...