உள்ளூர் சந்தைகளில் தமிழக அரிசி வகைகள்

உள்நாட்டு அரிசி விலையை விட குறைவு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழக மாநில அரிசி வகைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் உள்நாட்டு அரிசி விலைகளை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக அரிசி வகைகளை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக உள்நாட்டு அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இவ்வாறான பின்னணியில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தமிழக அரிசி வகைகள் இயற்கை உரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டவையா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடவில்லை.

இதேவேளை, சீனா இலங்கைக்கு 10 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...