வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது

டுபாய்க்கு செல்கையில் விமான நிலையத்தில் அதிரடி

இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயக் கடத்தலில் ஈடுபட்ட ஐவரை இலங்கை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவானது வெளிநாட்டு நாணயத்தில் மொத்தப் பணத்தை ஏனைய நாடுகளுக்கு கடத்துவதில் ஈடுபட்டுள்ளது.

இவர்கள் டுபாய் செல்ல முற்பட்ட போதே பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு நாணயங்கள் பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சுங்கப் பணியாளர்கள் அவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

22,300 அமெரிக்க டொலர்கள் , 63,500 யூரோக்கள், 8,725 ஸ்டேர்லிங் பவுண்கள், 292,00 சவுதி ரியால்கள் மற்றும் 75,000 திர்ஹாம்கள் இதன் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 40 மில்லியன் என இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...