ஜப்பானிய தூதுவருடன் அமைச்சர் சரத் வீரசேகர நடத்திய சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல்(ஓய்வு பெற்ற) கலாநிதி சரத் வீரசேகர ஆகியோருக்கிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று பத்தரமுல்லை சுகுறுபாயவிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றது.

அமைச்சுக்குச் சென்றிருந்த ஜப்பானிய தூதுவரை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வரவேற்றார். கடந்த வருடம் நவம்பரில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவராக நியமிக்கப்பட்ட மிசுகோஷி ஹிடேகிக்கு அமைச்சர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பன்னெடும் காலமாக ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவி வருகின்ற வரலாற்று முக்கியத்துமிக்க நட்புறவை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர்கள் இருவரும் தங்களுக்கிடையே கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக விடயங்களை மேம்படுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் இரு நாடுகளுக்குமிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. சமூக -பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சி தொடர்பான பல விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

றிசாத் ஏ. காதர்


Add new comment

Or log in with...