தீ விபத்து; கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார்.

Douglas Devananda

தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இதேவேளை குறித்த தீ விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயவியல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(பரந்தன் குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...