நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகுவதே இந்திய மக்களில் 72 வீதத்தினரின் விருப்பம்

பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டுமென்று 72 சதவீதமான இந்தியர்கள் விரும்புவதாக கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது. ஜீ. டி.வி நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. 72% இந்தியர்களின் விருப்பம் மோடி என்பதாகவே உள்ளது.

உத்தரப் பிரதேச தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக ஜீ.நியூஸ் ஊடகம் மிகப் பெரிய அளவில் கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் 2024 இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 72% பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகள் இருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு அடுத்த மாதம் 10ம் திகதி தொடங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

உத்தர பிரதேச தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க மற்றும் சமாஜ்வாதி கட்சிகளில் ஒன்றுதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. பா.ஜ.க மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. அகிலேஷ் யாதவ் பா.ஜ.க-வுக்கு சரிசமமாக போட்டியைக் கொடுக்கிறார். உத்தர பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் கருத்துக் கணிப்புகளை பல நிறுவனங்கள் நடத்தி, அந்த முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. ஏ.பி.பி சிவோட்டர், இந்தியா டி.வி, ரிபப்ளிக் டி.வி கருத்து கணிப்புகளில் பா.ஜ.க 220- இற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும், சமாஜ்வாதி கட்சி 160- இற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்புகள் வந்துள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பை ஜீ. நியூஸ் வெளியிட்டிருக்கிறது. டிசைன் ​ெபாக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, உத்தரப் பிரதேசத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற கருத்துக் கணிப்பை மிகப் பெரிய அளவில் நடத்தி இருக்கிறது ஜீ நியூஸ். கருத்துக்கணிப்பு முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது ஜீ நியூஸ்.

உத்தரப் பிரதேசத்தின் அடுத்த முதல்வராக பா.ஜ.க-வின் யோகி ஆதித்யநாத் வருவார் என 47% பேரும், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவுக்கு 35% பேரும், மாயாவதிக்கு 9%, பிரியங்கா காந்திக்கு 5% பேரும், மற்றவர்களுக்க்கு 4% பேரும் அடுத்த முதல்வர் கருத்துக் கணிப்பில் வாக்களித்திருக்கிறார்கள்.

2022 உத்தரப் பிரதேச தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்றும், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் ஆவார் என்றும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவு தெரிவிக்கிற‌து. அதோடு, 2024 நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என 72% இந்தியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...