ஆப்கானுக்கு இந்தியா மனிதாபிமான உதவி

உயிர் காப்பு மருந்துப் பொருட்களைக் கொண்ட உதவிகளை இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.

கடந்த வாரம் ஆப்கானை சென்றடைந்த இந்தியாவின் இந்த ஆறு தொன்கள் மனிதாபிமான உதவிகளையும் இஸ்லாமிய எமிரேட் வரவேற்கிறது என்று அதன் பேச்சாளர் சபியுல்லா முஜாஹித் தெரிவித்தார்.

காபுல், இந்திரா காந்தி மருத்துவமனைக்கு இந்த மருத்துவ உதவிகள் கையளிக்கப்பட்டன.

ஆப்கான் மக்களுடனான தமது முக்கிய உறவு மற்றும் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் தொடரும் என்றும் இந்தியா உறுதியளித்துள்ளது.


Add new comment

Or log in with...