வெள்ளவத்தை கடலில் தென்பட்ட முதலை

வெள்ளவத்தை கடலில் நேற்று காலை முதலை ஒன்று தென்பட்டமை தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீண்டும் முதலைகள் கடலில் நடமாடுவது தொடர்பில் கருத்துகள் வெளியாகின்றன. சில நாட்களுக்கு முன்னர் தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பரப்புகளில் அவ்வப்போது முதலைகள் காணப்பட்டன.  தெஹிவளை – புகையிரத நிலைய பகுதி கடலில் அண்மையில் நபர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது முதலை தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தை அடுத்து, முதலைகளைப் பிடிப்பதற்காக வனஜீவராசி அதிகாரிகள் காலி முகத்திடலைச் சூழவுள்ள கடற்பரப்பில் பல்வேறு நட வடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இவ்வாறானதொரு பின்னணியிலேயே நேற்று வெள்ளவத்தை கடலில் முதலை ஒன்று இருப்பதாகத் தெரியவந்துள்ளது.


Add new comment

Or log in with...